பொதுமக்கள் திடீர் போராட்டம்
பாளையங்கோட்டை அருகே பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் சென்னையில் நடைபெற உள்ள ஒரு அமைப்பின் நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். ஆனால் அவர்களை செல்ல விடாமல் தடுக்கும் வகையில் நேற்று இரவு மாநகர போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதைக்கண்ட ஊர் பொது மக்கள் திடீரென்று போலீசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.