கடையத்தில் திடீர் சூறைக்காற்று; பெயர் பலகை பறந்து விழுந்து 3 கார்கள் சேதம்

கடையத்தில் திடீர் சூறைக்காற்றில் பெயர் பலகை பறந்து விழுந்தது. இதில் 3 கார்கள் சேதம் அடைந்தன.;

Update: 2023-07-04 19:15 GMT

கடையம்:

கடையம் பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் பஸ்நிலையம் அருகில் மாடியில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிதி நிறுவனத்தின் பழைய பெயர் பலகை பறந்து ரோட்டின் ஓரம் நின்ற கார்களின் மீது விழுந்தது. இதில் 3 கார்கள் சேதம் அடைந்தன. அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெயர் பலகையை அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்