வைக்கோலில் திடீர் தீ
திருவாடானை அருகே வைக்கோலில் திடீெரன்று தீ பிடித்தது.
தொண்டி,
திருவாடானை அருகே உள்ள கோவிந்த மங்கலத்தை அடுத்த பாண்டியன் கோட்டை கிராமத்தில் அதே ஊரைச் சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் திடீரென தீப்பற்றி உள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மேலும் பரவி வைக்கோல் படப்பு முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் அருகில் இருந்த வைக்கோல் படப்பிலும் தீ பற்றி முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.