குளித்தலை - முசிறி செல்லும் சாலையில் சுங்ககேட்அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதன் அருகே உள்ள காலி இடத்தில் இருந்த காய்ந்த சருகுகள் குப்பைகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. பெட்ரோல் பங்க் அருகே தீப்பிடித்து புகை மூட்டமாக இருந்ததால் அப்பகுதியில் இருந்த கடைக்காரர்கள் இடையை மிகுந்த அச்சம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.