ஓடும் வேனில் திடீர் தீ
சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
அண்ணாமலைநகர்
தப்பி ஓட்டம்
சிதம்பரம் மீதிகுடி தெற்குதெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி. இவர் தனக்கு சொந்தமான ஆம்னி வேனை பழுது நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் சோதனை ஓட்டத்துக்காக நேற்று காலை கோபாலகண்ணன் என்பவர் அந்த வேனை சிதம்பரம் அண்ணாமலைநகர் மெயின் ரோட்டில் ஓட்டி சென்றார். மருத்துவக்கல்லூரி சாலையில் வந்தபோது திடீரென வேன் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகண்ணன் வேனை நடுரோட்டில் நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார்.
முழுவதும் எரிந்து சேதம்
தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து சேதமாகி, எலும்பு கூடாக காட்சி அளித்தது. எரிபொருள் கசிவால் இந்த தீ விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.