சிவகாசி கோவில் ராஜகோபுரத்தில் திடீர் தீ விபத்து

சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-11-20 17:44 GMT

சிவகாசி,

சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோவில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது.

இதில் கோயில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்