மின் கம்பிகள் உரசியதால் தென்னந்தோப்பில் திடீர் தீ
மின் கம்பிகள் உரசியதால் தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தளவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). விவசாயி. இவரது தென்னந்தோப்பில் தென்னை மரங்களை வளர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் தென்னந்தோப்பில் மேல் பகுதி வழியாக சென்ற மின் கம்பிகள் தென்னை மரத்தில் உரசியதால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பின்னர் அந்த தீ தென்னந்தேர்பில் காய்ந்த நிலையில் இருந்த சம்பு, செடி கொடிகளில் பட்டும் பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.