ஐஸ்கிரீம் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவில் திடீர் தீ
ஐஸ்கிரீம் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் அருகே உள்ள செட்டிபாளையத்தில் இருந்து நேற்று மதியம் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் ஏற்றிக்கொண்டு கரூருக்கு ஒரு சரக்கு ஆட்டோ வந்துள்ளது. கரூர் பஸ்நிலையம் அருகே கோவை சாலையில் வந்து கொண்டிருந்த போது சரக்கு ஆட்டோவின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கவனித்த சரக்கு ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்தி, பார்த்தபோது செல்ப் மோட்டார் மற்றும் என்ஜின் வயர்கள் தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் விரைந்து வந்து சரக்கு ஆட்டோவில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.