புதுக்கோட்டை சிறை வளாகத்தில் நேற்று திருச்சியை சேர்ந்த வக்கீல் சிவகாமி என்பவர் சிறைத்துறை காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ``திருச்சியை சேர்ந்த பப்லு என்பவர் கைதியாக புதுக்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக வக்கீல் என்ற முறையில் வந்து செல்வேன். தற்போது சிறையில் அவரை தாக்கி காயம் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அவருக்கு கொடுக்கப்படும் பொருட்களை கொடுக்காமல் சிறைத்துறையினர் எடுத்துக்கொள்கின்றனர். அவரை சந்திக்க அதிகாரியிடம் மனு அளித்தும் சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறையினரிடம் தொடர்ந்து கேட்டும் அனுமதி மறுத்துவிட்டனர். சிறைத்துறை நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்தி கேள்வி எழுப்புகிறேன் என்றார். பெண் வக்கீலால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் டவுன் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் வந்து அவரிடம் விசாரணை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.