சாலையில் திடீர் விரிசல்
பாவூர்சத்திரம் அருகே சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டது.
பாவூர்சத்திரம்:
நெல்லை - தென்காசி சாலை தற்போது நான்கு வழி சாலையாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மகிழ்வண்ணநாதபுரம் பஸ் நிறுத்தத்தின் அருகே, நெல்லை- தென்காசி சாலையில் நாகல்குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே நான்கு வழிச்சாலைக்காக வாறுகால் அமைத்து சாலை போடப்பட்டது. இந்த சாலையில் நேற்று திடீரென விரிசல் விழுந்தது. இந்த சாலையில் தற்காலிகமாக செல்லும் கனரக வாகனங்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "நான்கு வழிச்சாலையில் அனேக இடங்களில் தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பே இதுபோல் ஆபத்தை ஏற்படுவதாகவும் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் தரமான முறையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.