ரேஷன் கடைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு

ரேஷன் கடைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2022-12-17 18:10 GMT

கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் மற்றும் கருப்பகவுண்டன் புதூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை நேற்று கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், ரேஷன் கடைகளில் நுகர்வோர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து நுகர்வோர்கள் பொருட்களை வாங்கி செல்கிறார்களா, பயோமெட்ரிக் எந்திரத்தின் செயல்பாடு, எந்த மாதிரி உணவு பொருட்களை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள், அருகாமையில் உள்ள கடைக்காரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடையை தவிர்த்து பிற கடைகளில் எத்தனை நபர்கள் பொருட்கள் வாங்குகிறார்கள். வெளி மாநிலத்தவர்கள் ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு பொருட்களை வாங்குகிறார்கள், புழுங்கல் அரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, சாம்பார் பருப்பு, உள்ளிட்ட முக்கிய பொருட்கள் தவிர்த்து கூட்டுறவு தயாரிப்புகளான டீ தூள், சாம்பார் தூள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடம் உணவு பொருட்களின் தரம் குறித்து எவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு உணவுப் பொருட்களின் இருப்புகள் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்