மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவி

மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவி

Update: 2023-05-22 18:59 GMT

ஆலங்குளம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கல்லமநாயக்கர்பட்டியில், எஸ்.எம்.எஸ்.கல்லூரி உள்ளது. இங்கு கோவில்பட்டியை சேர்ந்த மாணவி மஞ்சுளா பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் சிவராஜ் என்பவருக்கும் கோவில்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இவரை கல்லூரி டீன் பிரபுதாஸ் குமார், பேராசிரியை சசிகலா மற்றும் பலர் பாராட்டினா்.

Tags:    

மேலும் செய்திகள்