சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் படுகாயம்

புதுக்கடை அருகே சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-06 18:45 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவன்

புதுக்கடை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவானந்தன். இவருடைய மனைவி உஷா. இவர்களது மகன் நிஜோலின் (வயது9). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் நிஜோலின் தனது தாயார் உஷாவுடன் புதுக்கடை- முன்சிறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புதுக்கடை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தார். சிறுவனின் தந்தை மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தார்.

படுகாயம்

எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நிஜோலின் மீது மோதியது. இதில் மாணவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் நின்றவர்கள் நிஜோலினை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மீதும் அவரது தந்தை மீதும் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,

Tags:    

மேலும் செய்திகள்