பொள்ளாச்சி அருகே குயில் குஞ்சுகளை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த மாணவர்
பொள்ளாச்சி அருகே குயில் குஞ்சுகளை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த மாணவர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது நண்பர்களுடன் சாலையில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு சில காக்கைகள் இரண்டு குயில் குஞ்சுகளை விரட்டி தாக்கின. இதனை கண்ட சந்தோஷ்குமார் உடனடியாக விரைந்து செயல்பட்டு காக்கைகளை விரட்டி விட்டு குயில் குஞ்சுகளை லாவகமாக காப்பாற்றினார். பின்னர், குயில் குஞ்சுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்தி உரிய பாதுகாப்புடன் ஆழியார் சோதனை சாவடி அருகே உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனை பெற்றுக்கொண்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் தகவல் அறிந்த பொதுமக்கள் பலர் மாணவனின் நற்செயலை வெகுவாக பாராட்டினர். மீட்கப்பட்ட குயில் குஞ்சுகள் வனத்துறையினால் பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது.