மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த நெகமம் அரசு பள்ளி மாணவர்

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் நெகமம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தார்.

Update: 2023-06-26 19:45 GMT

நெகமம்

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் நெகமம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தார்.

தரவரிசை பட்டியல்

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான பிரிவில் கோவை மாவட்டம் நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் சரவணக்குமார் 200-க்கு 199 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். மேலும் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 559 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மகிழ்ச்சி

இதுகுறித்து மாணவர் சரவணக்குமார் கூறியதாவது:-

எனது தந்தை பாலசந்திரன் நெசவு தொழிலாளி. தினமும் தறியில் கஷ்டப்பட்டு உழைத்துதான் என்னை படிக்க வைக்கிறார். இதை உணர்ந்து நானும் நன்றாக படித்தேன். தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான பிரிவில் மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கணினி அறிவியல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க விருப்பம். அங்கு கணினி அறிவியல் அல்லது எலெக்ட்ரானிக் கம்யூனிகேசன் துறையை தேர்ந்தெடுத்து படிக்க உள்ளேன். எனது படிப்புக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவர் சரவணக்குமாருக்கு குடும்பத்தினர், நண்பர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்