இளம்பிள்ளை,
இளம்பிள்ளை அருகே விடுதி வளாகத்தில் நாவல் பழம் பறித்த போது, மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலியானான்.
விடுதி மாணவர்
பெத்தநாயக்கன்பாளையம் அருகே நொய்யமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் பாஸ்கர் (வயது 17), இவர், இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அங்குள்ள மாணவர் வீடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி வளாகம் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்ததாக தெரிகிறது. அப்போது மரத்தில் இருந்து பாஸ்கர் தவறி கீழே விழுந்தார்.
சாவு
இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவன் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.