வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்தது

வேலகவுண்டம்பட்டி அருகே வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-03-10 18:45 GMT

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நல்ல குமாரன்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி குப்பாயி (வயது 70). இவர் தனது வீட்டிற்கு அருகே கால்நடைகளுக்காக வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்த வைக்கோல் போரில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வைக்கோல் போரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து சாம்பலானது. அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்