அன்னதானப்பட்டி:-
நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 28). பெயிண்டர். தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன், காண்டிராக்டர் கோகுல்ராஜ் என்பவருக்கும் சம்பள பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், தான் வைத்திருந்த கத்தியால் ராமச்சந்திரனை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் கோகுல்ராஜை (30) நேற்று கைது செய்தனர்.