கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-11-10 18:34 GMT

ஏலகிரிமலையில், நிலாவூர் கிராமத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இரண்டு வயதுள்ள பெண் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கயிறு கட்டி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து சுப்பிரமணி திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்