திருமக்கோட்டை கடைவீதியில் வேகத்தடை அமைக்கப்பட்டது
‘தினத்தந்தி’செய்தி எதிரொலி: திருமக்கோட்டை கடைவீதியில் வேகத்தடை அமைக்கப்பட்டது
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை கடைவீதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லாமல் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் நடைபெற்றன. இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வர்த்தகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் விளைவாக திருமக்கோட்டை கடைவீதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து வேகத்தடை அமைத்த அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.