மதுரை நகரில் 30 இடங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு

விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மதுரை நகரில் 30 இடங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

Update: 2023-08-02 19:35 GMT

விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மதுரை நகரில் 30 இடங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

ஆய்வு குழு

தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான சாலைகளில் மிகவும் ஆபத்தான மற்றும் அங்கு விபத்து நடைபெறும் பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும், போக்குவரத்து மேம்பாட்டிற்கு எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய பீல்டு சர்வே டீம் என்னும் ஒரு ஆய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குழுவில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களுக்கு தனித்தனியாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

30 இடங்களில் ஆய்வு

மதுரை நகரில் நடைபெறும் இந்த பணியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, கணேஷ்ராம், கார்த்தி ஆகியோர் தலைமையில் இந்த குழுவினர் பல்வேறு விபத்து நடக்கும் பகுதிகளை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பாக காமராஜர் சாலை, ரிங் ரோடு, மாட்டுத்தாவணி சாலை, எல்லீஸ்நகர் மேம்பாலம், அழகர்கோவில் ரோடு உள்பட 30 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவுகளை அரசுக்கு வழங்குவதன் மூலம் அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கு எந்த வகையில் போக்குவரத்தை சீர் செய்து விபத்தை தடுக்கலாம் என்று முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்