வீடு, வீடாக சென்று குறை கேட்கும் சிறப்பு முகாம்- திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

வீடு,வீடாக சென்று குறை கேட்கும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-10-09 21:40 GMT

திருமங்கலம்,

நகராட்சி கூட்டம்

திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஆதவன் அதியமான், சுகாதார அலுவலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக திருமங்கலம் நகர் பகுதியில் மாதத்தில் 5 வார்டுகள் வீதம் வீடு தேடி வந்து குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துதல், காய்ச்சல் குறித்து தினசரி நகரில் வீடு, வீடாக ஆய்வு செய்வது, பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின்திரவியம், வினோத், காசிபாண்டி, பெல்ட்முருகன், சரண்யாரவி, பாண்டி, முத்துக்காமாட்சி, ரம்ஜான்பேகம் சாலிகாஉல்பத், பவுசியா, அமுதா, ராஜகுரு, நகராட்சி மேலாளர் ரத்தினகுமார், ஓவர்சீஸ் ராஜா, நகர அமைப்பு அலுவலர் சின்னா, சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்