போதைப்பொருள் கண்டுபிடிக்கும் பணியில் இருந்த மோப்பநாய் இறந்தது

போதைப்பொருள் கண்டுபிடிக்கும் பணியில் இருந்த மோப்பநாய் இறந்தது

Update: 2023-08-08 19:57 GMT

திருச்சி மத்திய சிறையில் போதைப்பொருளான கஞ்சா புழக்கத்தை தடுக்கும் பணியில் மோப்பநாய் பினோ ஈடுபடுத்தப்பட்டு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு பிறந்த மோப்பநாய் பினோவுக்கு கோவையில் உள்ள மோப்பநாய் பயிற்சி பள்ளியில் 11 மாதகால பயிற்சி அளிக்கப்பட்டு 2011-ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வந்தது. வெளியில் இருந்து சிறைக்குள் தூக்கி எறியப்பட்ட கஞ்சா, ஒரு சில கைதிகள் அறைக்குள் பதுக்கி வைத்து இருந்த கஞ்சாவை மோப்பநாய் பினோ அதிகாலையில் சிறை வளாகத்தில் சோதனைக்கு அழைத்து சென்றபோது கண்டுபிடித்துள்ளது.

பயிற்சியாளர்கள் டேவிட்சந்தியாகு, சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து பினோவுக்கு பயிற்சி அளித்து வந்தனர். மேலும் பயிற்சியின்போது, சிறந்த மோப்பநாய் என்ற பட்டம் பெற்றுள்ளது. மோப்பநாய் கண்காட்சியில் சிறந்தமுறையில் பயிற்சியின் கட்டளைக்கு கீழ்படிந்த நாய் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக மோப்பநாய் பினோக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டது. தொடர்ந்து பினோவை ஜெகதீசன், ஆனந்தன் ஆகியோர் பராமரித்து வந்தனர். பணியில் இருந்து சிறிதுகாலம் ஓய்வில் இருந்த பினோ நேற்று உயிரிழந்தது. இதையடுத்து சிறை அலுவலர் (பொறுப்பு) கே.கண்ணன் முன்னிலையில் இறந்த மோப்பநாய் பினோவுக்கு 15 குண்டுகள் முழங்க நேற்று பகலில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சிறை வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்