தொலைக்காட்சி பெட்டிக்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது

விழுப்புரம் அருகே தொலைக்காட்சி பெட்டிக்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-05-09 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே கணக்கன்பாளையம் பகுதியில் தொலைக்காட்சி பெட்டிகள் சர்வீஸ் செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் சர்வீஸ் செய்வதற்காக வைத்திருந்த தொலைக்காட்சி பெட்டியின் உள்ளே நேற்று சுமார் 5 அடி நல்லப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைப்பார்த்ததும் கடையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்