கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி பெரிய கடை வீதியில் உள்ள காய்கறி கடையின் அருகே நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள்இரவு பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். இதனால் அந்த பாம்பு மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அந்த பகுதியில் கருவாடு கடைக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கருவாடு கடைக்குள் புகுந்த பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு கட்டி கொண்டு வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அரவக்குறிச்சி கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.