வீட்டின் அருகே பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளியில் வீட்டின் அருகே பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2023-08-10 18:56 GMT

நாட்டறம்பள்ளி, தாயப்பன் தெருவில் வசித்துவருபவர் சவுந்்தரராஜன். இவரது வீட்டின் அருகில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்புக்காட்டில் பாம்பை கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்