கோவில் ஊழியர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு

பழனி முருகன் கோவில் ஊழியர் வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

Update: 2023-04-27 15:39 GMT

பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள கோவில் பணியாளர் குடியிருப்பை சேர்ந்தவர் துரை. இவர், பழனி முருகன் கோவிலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் பாம்பு பிடிக்கும் நபரான நடராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு பழனி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்