வத்தலக்குண்டுவில் கோவிலுக்குள் புகுந்த பாம்பு

வத்தலக்குண்டுவில் உள்ள காளியம்மன் கோவிலுக்குள் பாம்பு புகுந்தது.;

Update: 2023-06-20 21:00 GMT

வத்தலக்குண்டுவில் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் தயார் செய்யும் சமையல் கூடமும் உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை அந்த சமையல் கூடத்துக்குள் சுமார் 3 அடி நீள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதனை பார்த்த சமையல்காரர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். மேலும் இதுகுறித்து அவர்கள் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், கோவில் சமையல் கூடத்துக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை வனப்பகுதிக்கு கொண்டுபோய் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்