தேவகோட்டை
தேவகோட்டையில் உள்ள ஒத்தக்கடை தின்னப்பசெட்டி ஊருணி அருகில் பழனி என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்குள் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதுகுறித்து அறிந்த தேவகோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவகுருநாதன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த பாம்பு பிடிபடாமல் அருகில் உள்ள மரத்தில் ஏறி சென்றது. இதையடுத்து தீயணைப்பு வீரர் மரத்தில் ஏறி லாவகமாக பாம்பை பிடித்தார். பின்பு அதை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.