போலீஸ் நிலையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
வாணியம்பாடி போலீஸ் நிலையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்தது. வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள புதருக்குள் இருந்து கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று வெளியே வந்து போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. இதனை கண்ட போலீசார் அலறியடித்து ஓடினர்.
பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து பாலாற்று பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.