வீட்டிற்குள் புகுந்த பாம்பு சிக்கியது
திருவாடானை அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு சிக்கியது.
தொண்டி,
திருவாடானை அருகேயுள்ள அஞ்சுகோட்டை கிராமத்தில் காந்தி என்பவர் வீட்டிற்குள் திடீரென சுமார் 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் பதுங்கிய பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றனர்.