கொடைக்கானலில் ஓட்டல் அதிபர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
கொடைக்கானலில் ஓட்டல் அதிபர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஓட்டல் அதிபர். இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட வீட்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை 1 மணி நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். அது, கருஞ்சாரைப்பாம்பு ஆகும். அந்த பாம்பு, சுமார் 7½ அடி நீளம் இருந்தது. அதனை வனத்துறையினரிடம், தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். அதன்பிறகு கொடைக்கானல் அப்சர்வேட்டரி வனப்பகுதியில் அந்த பாம்பு விடப்பட்டது. பாம்பு பிடிப்பதை பார்ப்பதற்காக, அந்த பகுதியில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.