வீட்டுக்குள் புகுந்த பாம்பு
கோபால்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
கோபால்பட்டி அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவரது வீட்டின் மேற்கூரையில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது 6 அடி நீளம் உடைய சாரைப்பாம்பு ஆகும். அதனை அருகே உள்ள வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர்.