வீட்டுக்குள் புகுந்த மண்ணுளி பாம்பு

போடி அருகே கூலித்தொழிலாளி வீட்டுக்குள் மண்ணுளி பாம்பு புகுந்தது.;

Update: 2023-08-07 20:00 GMT

போடி அருகே உள்ள கரட்டுபட்டியை சேர்ந்தவர் ரமேஷ். கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து அலறியடித்தபடி வெளியேறினர். பின்னர் இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி, வீட்டுக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீள மண்ணுளி பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை தீயணைப்பு படையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள், அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்