போடியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
போடியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
போடி சர்ச் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த சக்திவேல், உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சக்திவேலின் வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.