வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2023-07-07 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை அருகே உள்ள வழிமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவள்ளி. இவரது வீட்டில் 6 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்