விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

நத்தம் அருகே விவசாயி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

Update: 2023-06-11 19:30 GMT

நத்தம் அருகே சமுத்திரபட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33). விவசாயி. இவரது வீட்டுக்குள் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன், இதுகுறித்து உடனடியாக நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சிலம்பரசன் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை, பூலாமலை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்