காருக்குள் புகுந்த பாம்பு

திருச்சியில் காருக்குள் பாம்பு புகுந்தது

Update: 2022-11-18 20:04 GMT

திருச்சி கோர்ட்டு வளாகத்தில் நேற்று நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் 6 அடி நீள சாரைபாம்பு புகுந்து பதுங்கி கொண்டது. இதை கவனித்த அங்கிருந்த போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி, அந்த கார் உரிமையாளரிடம் தகவல் கொடுத்தார். பின்னர் விரைந்து வந்த அந்த காரின் உரிமையாளர். திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காருக்குள் பதுங்கி இருந்த பாம்பை தேடினர். ஆனால் பாம்பு வெளியே வரவில்லை. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை. இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளர் காரை எடுத்துக்கொண்டு கார் சர்வீஸ் சென்டருக்கு சென்று தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து தப்பி சென்றது.

இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நல்லதண்ணி கிணறு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருக்கும் போது இவரது ஓட்டு வீட்டின் மேற்கூரையில் சத்தம் கேட்டது. பின்னர் சுப்பிரமணியன் வீட்டின் மேற்கூரையை பார்த்த போது அங்கு 10 அடி நீள சாரை பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பாம்பை லாவகமாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர். மேலும் இ.பி.ரோடு பூலோகநாதர் கோவில் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் காத்திருப்பு அறையில் இருந்த 5 அடி நீள பாம்பை திருச்சி தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டு பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்