பெட்டிக்கடைக்குள் புகுந்த பாம்பு

நாகையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.

Update: 2022-07-10 16:47 GMT

வெளிப்பாளையம்:

நாகை அருகே பால்பண்ணைசேரி தெத்தி ரோட்டில் வசித்து வருபவர் ரேவதி. இவர் தனது வீட்டு வாசலில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரேவதி நேற்று வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையின் பரணிமேல் வைத்திருந்த வலையில் இருந்து சத்தம் வந்துள்ளது. இதனால் ரேவதி பரணியை பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த வலையில் ஒரு நல்லபாம்பு சிக்கி கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்