ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து தென்னை மரங்களை சாய்த்தன.

Update: 2023-03-16 21:04 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து தென்னை மரங்களை சாய்த்தன.

காட்டு யானை

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவாரங்களில் பதுங்கும் யானை, இரவில் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விவசாய தோட்டங்களில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்தது. அப்போது சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை நீண்ட நேரத்திற்கு பின்னரே தோட்டத்தில் இருந்து வெளியேறியது.

விவசாயிகள் பீதி

ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் யானை நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். ஒற்றை யானை நடமாடும் பகுதி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் பாதை ஆகும். எனவே அச்சுறுத்தி வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பக்தர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்