மாந்தோப்புகளுக்குள் ஒற்றை யானை அட்டகாசம்

குண்டலப்பல்லி அருகே மாந்தோப்புகளுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளமது. சாத்கர் மலையையொட்டிய விவசாய நில பகுதிக்கு 7 காட்டு யானைகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2023-07-22 19:13 GMT

பேரணாம்பட்டு

குண்டலப்பல்லி அருகே மாந்தோப்புகளுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளமது. சாத்கர் மலையையொட்டிய விவசாய நில பகுதிக்கு 7 காட்டு யானைகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

யானைகள்

பேரணாம்பட்டு வனசரக பகுதியிலுள்ள சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, பாஸ் மார்பெண்டா, கொத்தூர், பொதலகுண்டா, ரங்கம் பேட்டை, குண்டலபல்லி. உள்ளிட்ட காப்புக் காடுகளை யொட்டி விவசாய நிலங்களும் மா, வாழை, தென்னந்தோப்புகளும், நெல் வயல்களும் உள்ளன.இந்த நிலையில் சேராங்கல் காப்புக் காடு - மோர்தானா காப்புக்காடு இடையே சுற்றித் திரிந்து வரும் ஒற்றையானை நேற்று அதிகாலை 3 மணியளவில் குண்டலப் பல்லி பகுதிக்கு சென்றது.

அங்கு ஜான் வின்சென்ட், பாலின்ராஜ், ராஶே் ஆகியோரது மாந்தோப்புகளில் மாமரங்களை முறித்தும், அங்கிருந்த பாசன குழாய்களையும் உடைத்து நாசப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

தகவலறிந்த வனவர் அண்ணாமலை, வனகாப்பாளர்கள் ரவி, வெங்கடேசன். புருஷோத்தமன் ஆகியோர் சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து காப்புக் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

விவசாயிகள் பீதி

இந்த நிலையில் தற்போது மோர்தானா அணை திட்டப் பகுதியிலிருந்து 2 குட்டி யானைகளுடன் 5 காட்டு யானைகள் பேரணாம்பட்டு அருகே சாத்கர் மலையில் நேற்று இறங்கியுள்ளது.

இந்த மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் இது குறித்து வனத்துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர்.

ஒரு பக்கம் ஒற்றை யானையின் தொடர் அட்டகாசம், இன்னொரு பக்கம் 7 காட்டு யானைகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

காட்டு யானைகளை விரட்ட பேரணாம்பட்டு வனப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்