ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு;
போத்தனூர், ஜூலை
கோவை வெள்ளலூர் ெரயில்வே காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது62). ெரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெள்ளலூர் எல்.ஜி.நகர் பகுதி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்தி ருந்தார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவிகளை 2 பேர் கேலி செய்தனர். உடனே அவர்களை சண்முகம் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து சண்முகத் தை தாக்கியதுடன் அங்குள்ள இளநீர் கடையில் இருந்த அரிவாளை எடுத்து வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் நடத்திய விசாரணையில் சண்முகத்தை அரிவாளால் வெட்டியது போத்தனூரை சேர்ந்த சேட்டு அன்னியன் மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.