சகோதரத்துவத்தை பறைசாற்றும் ஐக்கியா நிகழ்ச்சி
வேலூர் வி.ஐ.டி.யில் ‘ரிவேரா’ கலைவிழாவில் சகோதரத்துவத்தை பறைசாற்றும் ஐக்கியா நிகழ்ச்சி நடந்தது.
வி.ஐ.டி.யில் ரிவேரா'23 என்ற சர்வதேச கலைத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-வது நாளான நேற்று காலை நம் நாட்டின் சகோதரத்துவத்தை பறைசாற்றும் விதத்தில் ஐக்கியா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளம், மத்திய பிரதேசம், மராட்டியம், மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களின் மாநில பண்பாடு மற்றும் கலாசாரத்தை போற்றும் வகையில் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து ராகா ரீகி என்ற லைட் மியூசிக், ப்ரிஸ்க் பேக்டர் என்ற நடன போட்டி, நாளயக் குழுவின் இசைக்கச்சேரி நடைபெற்றது.
நிறைவு நாளான நாளை பிரபல திரைப்பட நடிகை ராஷிகன்னா கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.