புகையிலை விற்ற கடைக்காரர் கைது

கழுகுமலை அருகே புகையிலை விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-02 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகேயுள்ள குமாரபுரம் தெற்கு தெருவில் உள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கடையில் தடை செய்யப்பட்ட 10 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. அந்த பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. ஆயிரமாகும். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்காரரான சுப்பையாவை (வயது 70) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்