புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
ஜோலார்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்ேபரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கடையின் உரிமையாளரான திருப்பத்தூர் அருகே உள்ள சத்தார் நகர் பகுதியை சேர்ந்த அன்வர் மகன் சனாவுல்லா (வயது 47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.