பவானி அருகே அடுத்தடுத்து சம்பவம் 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

A series of incidents near Bhawani 2 Lock breaking of temples and theft of jewellery-money

Update: 2022-11-16 20:37 GMT

பவானி

பவானி அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓங்காளியம்மன் கோவில்

பவானியை அடுத்த எலவமலை அருகே உள்ள சத்யாநகர் பகுதியில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.

கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மூக்குத்தி, தோடு, தாலிக்கொடி, ஆரம் 2, தாலிக்கொடி செட்-1, தாயத்து-1 உள்பட 12½ பவுன் நகைகளை அம்மனுக்கு அணிவித்திருந்தனர். இந்த நகைகளை சிறப்பு தினங்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலில் உள்ள பீரோவில் வைத்து பூட்டி வைப்பது வழக்கம்.

திறந்துகிடந்தது

இந்த நிலையில் நேற்று காலை பூசாரி பழனிசாமி கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்று பார்த்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு் திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கருவறையில் உள்ள பீேராவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த 12 பவுன் நகைகளை காணவில்லை. மேலும் அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது.

நகை-பணம் கொள்ளை

இதுகுறித்து கோவில் பூசாரி பழனிசாமி சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவத்தன்று இரவு அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. இதை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு கருவறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோவை உடைத்துள்ளனர்.

அதன்பின்னர் அதில் இருந்த 12 பவுன் நகைகளை திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

விநாயகர் கோவில்

இதேபோல் எலவமலை வீரசிவாஜிநகர் பகுதி மெயின் ரோட்டில் அமைந்துள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் அதே நாள் இரவு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்ததும் கைரேகை நிபுணர்கள் சம்பவஇடத்துக்கு சென்று அங்கு பதிவான ைகரேகைகளை பதிவு செய்தனர்.

மேற்கண்ட 2 சம்பவங்களிலும் ஒரே திருட்டு் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கோணத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

பவானி பகுதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்