பாம்பு குட்டியால் பரபரப்பு

பாம்பு குட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-10 21:01 GMT

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனைய கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெறும் பகுதியில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு, பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று விழா நடைபெறும் சிறிது நேரத்துக்கு முன், ஒரு பாம்பு குட்டி அங்கிருந்த பூந்தொட்டிக்கு அருகே தஞ்சம் அடைந்து இருந்தது. ஊழியர் ஒருவர் பூந்தொட்டியை தூக்கிய போது, அதில் பாம்பு இருந்ததை பார்த்ததும் அதை காலால் மிதித்து கொன்று அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்