மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி சாவு
கரிவலம்வந்தநல்லூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு செல்வதற்காக லட்சுமியாபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மூக்காண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.