மீனவருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது

தூத்துக்குடியில் மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-25 19:00 GMT

தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 37). மீனவர். இவரது மனைவி கவுசல்யா. இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கவுசல்யா தபால் தந்தி காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் நேற்று முன்தினம் சங்கர், தபால் தந்தி காலனிக்கு சென்று கவுசல்யாவை வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் எட்வின், இஸ்ரவேல் (23), மதன்குமார் (19), ராபின் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்