வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சிவகாசியில் வாலிபரை அாிவாளால் வெட்டினர்.

Update: 2023-05-23 19:45 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் மணிகண்டன் என்கிற புளுக்கை (வயது 26). இவரது நண்பர் மணிகண்ட பெருமாள். இவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதை தொடர்ந்து மணிகண்ட பெருமாளிடம் பேசுவதை மணிகண்டன் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்ட பெருமாள் தனது அண்ணன் பாண்டி ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிகண்டனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்